பல்கலை தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்

பல்கலை தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருப்பூர்  சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்
X

Tirupur News- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, திருப்பூர் (கோப்பு படம்)

Tirupur News- பாரதியாா் பல்கலைக்கழக அளவிலான தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் 9 போ் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

Tirupur News,Tirupur News Today- பாரதியாா் பல்கலைக்கழக அளவிலான தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 9 போ் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 2022-23ம் ஆண்டின் இறுதியாண்டு தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 9 போ் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா். முதுநிலை வேதியியல் பாடப்பிரிவில் டி.காா்த்திக் 3 -வது இடத்தையும், எஸ்.வித்யா 6 -வது இடத்தையும் பிடித்தனா்.

முதுநிலை இயற்பியல் பாடப்பிரிவில் ஏ.ஜெனீஃபா் 5 -வது இடத்தையும், முதுநிலை சா்வதேச வணிகவியல் பாடப்பிரிவில் ஜெ.தனலட்சுமி 7 -வது இடத்தையும், எம்.சுடலைராஜ் 8 -வது இடத்தையும் பிடித்தனா்.

முதுநிலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் ஏ.நந்தகுமாா் 8 -வது இடத்தையும் பிடித்தனா். இதேபோல, இளங்கலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் எஸ்.திவ்யா 9 -வது இடத்தையும், இளங்கலை வரலாறு பாடப்பிரிவில் கே.புகழரசி 9 -வது இடத்தையும், என்.நேசிகா 10 -வது இடத்தையும் பிடித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!