திருப்பூரில் இருந்து சென்னைக்கு 4 வாகனங்களில் சென்ற புயல் நிவாரணப் பொருள்கள்
Tirupur News- திருப்பூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேலும் 4 வாகனங்களில் புயல் நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகள், மழைவெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் இன்னும் வீடுகளை விட்டு வெளியேறி வர முடியாத அளவுக்கு வீடுகளை சுற்றிலும், மழைவெள்ளம் தேங்கியுள்ளது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மிீட்பு பணிகளும், நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள், பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களது உணவு, தங்குமிடம் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. திருப்பூரில் இருந்து ஏற்கனவே, இவ்வாறாக நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீண்டும் சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியப் பொருள்கள் ஏற்கெனவே 10 வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் அரிசி, பால் பவுடா், ரொட்டி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், ஆடைகள், உணவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. இந்தப் பொருள்கள் அனைத்தும் 4 வாகனங்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முன்னதாக, சேகரிக்கப்பட்டிருந்த பொருள்களை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu