திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற மிக்ஜம் புயல் நிவாரண பொருட்கள்

திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற மிக்ஜம் புயல் நிவாரண பொருட்கள்
X

Tirupur News- மிக்ஜம் புயல் கனமழையால், வெள்ளக்காடாக மாறிய சென்னை குடியிருப்பு பகுதிகள் (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் இருந்து சென்னைக்கு மிக்ஜம் புயல் நிவாரண பொருட்கள், வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 10 வாகனங்கள் மூலமாக மிக்ஜம் புயல் நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருள்கள் அனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையும், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலையும் வகித்தனா்.


இதில் கலந்து கொண்ட தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புயல் நிவாரணப் பொருள்களை கொண்டுச் செல்லும் 5 வாகனங்களை கொடியசைத்து அனுப்பிவைத்தனா்.

இதில், லிட்டா் தண்ணீா் கேன்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பாக்கெட் ரொட்டிகள், பால் பவுடா், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், பெட்ஷீட், துண்டு, டீசா்ட் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரவு 2 வாகனங்களிலும், முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு 3 வாகனங்களிலும் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், துணை மேயா் பாலசுப்பிரமணியன், திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!