‘சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார்’ - ‘மாஜி’ அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் கிண்டல்

‘சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார்’ - ‘மாஜி’ அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் கிண்டல்
X

Tirupur News. Tirupur News Today- அதிமுக வார்டு பூத் கமிட்டி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம், முருங்கபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

Tirupur News. Tirupur News Today- தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

Tirupur News. Tirupur News Today- அ. தி. மு. க. திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு சட்ட மன்ற தொகுதி, முருங்கபாளையம் பகுதி சார்பில் 26, 27, 28, 29 ஆகிய வார்டு பூத் கமிட்டி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், முருங்கபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு அ. தி. மு. க. முருங்கபாளையம் பகுதி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு மாநில செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம். எல். ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இதில் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் பூலுவபட்டி பாலு, வார்டு பொறுப்பாளர்கள் சிலம்பரசன், ரவிக்குமார், சேகர், தம்பி சின்னச்சாமி, 38-வது வார்டு செயலாளரும், ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான ஆண்டிபாளையம் ஆனந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம். எல். ஏ. நிருபர்களிடம் கூறியதாவது,

அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர்கள், எம். எல். ஏ. க்கள், எம். பி. க்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது நாங்கள் போதுமான ஒத்துழைப்பை கொடுத்தோம். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறை ஊழியர்களையும், வாகனங் களையும் தாக்குவதை தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. அந்த சம்பவத்தின் மூலமாக தி. மு. க. ஆட்சி முடிவு கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து தொழிலாளர்களும், உலகம் முழுவதும் இருந்து தொழில்துறையினரும் திருப்பூரில் தொழில் செய்து வந்த நிலையில், இன்று வாரத்தில் 2 நாட்கள் வேலை என்பதே அரிதாக உள்ளது. தி. மு. க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் திருப்பூரில் தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். அதன்படி தற்போது பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. தி. மு. க. ஆட்சி வந்தால் திருப்பூருக்கு திண்டாட்டம்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் பனியன் தொழில், பொள்ளாச்சியில் தென்னை விவசாயம், கோவை மற்றும் ஈரோட்டில் ஜவுளித் தொழில், கரூரில் ஜமுக்காள தொழில் என தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முதலீட்டாளர் களை தேடி வெளிநாடுகளுக்கு செல்வது விந்தையாக உள்ளது. இங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்வது சுற்றுலாவாகத்தான் நினைக்க முடியும். எனவே அனைத்து தொழில்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!