திருப்பூரில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம்

திருப்பூரில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம்
X

Tirupur News- திருப்பூரில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் நடந்தது, (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் நடந்தது,

Tirupur News,Tirupur News Today- மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 22 வங்கிகள் பங்கேற்றன.

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். நடப்பு கல்வியாண்டில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.64 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!