உதய் எக்ஸ்பிரஸ்! சூப்பர் அப்டேட் கொடுத்த தென்னக ரயில்வே. இனி கவலையில்ல!

உதய் எக்ஸ்பிரஸ்! சூப்பர் அப்டேட் கொடுத்த தென்னக ரயில்வே. இனி கவலையில்ல!
X
உதய் எக்ஸ்பிரஸ் இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது

கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்: 22666) வாரத்தின் 7 நாட்களும் இயங்கும். டிக்கெட் முன்பதிவு செய்து பயணிகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது பெங்களூர். அதேபோல், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையை கோவை பெற்றுள்ளது. பல்வேறு தொழில்கள் நிறைந்த இந்த இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கும்.

தொழில் நிமித்தமாகவும் பணி நிமித்தமாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில், பேருந்துகள், விமானங்கள் மூலமாக கோவை - பெங்களூர் இடையே பயணம் செய்து வருகிறார்கள். இதனால், கோவை - பெங்களூர் இடையேயான ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை - பெங்களூர் இடையே உதய் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

கோவையில் அதிகாலை, 5:45 மணிக்கு புறப்படும் உதய் எக்ஸ்பிரஸ், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 12:40 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மதியம், 2:15 மணிக்கு பெங்களூருவில் புறப்படும் ரயில் (எண்: 22665) இரவு, 8:30 மணிக்கு திருப்பூரை கடந்து, 9:00 மணிக்கு கோவை சென்றடைகிறது.

வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே இயங்கி வந்த உதய் எக்ஸ்பிரஸ், இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்படுமென தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பெங்களூர் இடையே தினமும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!