மழை பாதிப்பா? நான் இருக்கேன்: உறுதிமொழி தந்து களமிறங்கும் எம்எல்ஏ
திருப்பூரில், மாபெரும் தூய்மைப் பணி முகாமின் (Mass Cleaning) போது, கழிவுகளை அகற்றிய எம்.எல்.ஏ. செல்வராஜ்.
திருப்பூரில் மழை பாதிப்பு, கழிவுநீர் பிரச்னை இருந்தால், ஒரு பதிவிட்டாலே போதும் சரி செய்து தருகிறேன் என்று, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் உறுதிமொழி தந்துள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.ஆக இருக்கும் க. செல்வராஜ், மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, பம்பரமாக சுழன்று செயல்பட்டு தீர்வை தருகிறார். பொதுமக்கள் பிரச்சனைகளை எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, களத்திலும் சரி, தனது சமூகவலை தளத்திலும் சரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்.
#உங்கள்_குறைகளுக்கு_உடனடி_தீர்வு என்ற ஹேஷ்டே மூலம், தொகுதி பிரச்சனைகளை பதிவிடச் சொல்லி, அதை அன்றாடம் போய் கவனித்து உரிய வழிவகை செய்து தருகிறார். அத்துடன், தொகுதி மக்களால் அவரை எளிதில் நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்க முடிகிறது. அவற்றை கேட்டு, உரிய அதிகாரிகளிடத்தில் பேசி, தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு சமீபத்திய உதாரணமாக, திருப்பூர் காலேஜ் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை, பார் அகற்றியதை சொல்லலாம். 10 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் போராடியும் பலனில்லை. இந்த சூழலில்தான், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற, எம்.எல்.ஏ. செல்வராஜ் தானே போராட்ட களத்தில் குதித்து, மதுபானக் கடையை அகற்றும் வரை ஓயவில்லை; இறுதியில் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதற்காக, அப்பகுதி பொதுமக்கள், கட்சி வேறுபாடின்றி அவரை பாராட்டி வருகின்றனர்.
தற்போது திருப்பூர் மாவட்டத்திலும், நகரில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. மழை பாதிப்புகள் ஆங்காங்கே இருந்து வரும் சூழலில், மழை மற்றும் கழிவுநீர் பிரச்சனையை, தனது கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக, க.செல்வராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu