பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது
X

திருப்பூரில், குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளி கைது.

திருப்பூரில், பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், அந்த குழந்தையிடம் நைசாக பேசி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்ட குழந்தையின் தாய் கூச்சல் போட்டதும், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து, திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சகுபர் சாதிக் என்பதும், அவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் 3 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சகுபர் சாதிக்கை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story
ai in future agriculture