பெண்களுக்கு ஆலோசனை வழங்கிய 'சேவ்'

பெண்களுக்கு ஆலோசனை வழங்கிய சேவ்
X

வீரபாண்டியில், பெண்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில், திருப்பூர் சேவ் அமைப்பு சார்பில்,பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சேவ் அமைப்பின் தலைவர் அலோசியஸ் மற்றும் செயல் இயக்குனர் யாகுலமேரி தலைமை வகித்தனர். இதில் சேவ் அமைப்பின் உறுப்பினர் கவிதா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர், குடும்பம், சமூகம் மற்றும் பணியிடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆலோசனை வழங்கினர்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது உதவி எண் 181, 112 என்ற எண்களில் அழைத்து உதவி பெறலாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Next Story
ai in future agriculture