திருப்பூரில் பூக்கள், வாழைக்கன்றுகள் விற்பனை ஜோர்; பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்
Tirupur News- திருப்பூரில் இன்று வாழைக்கன்றுகள், பூக்கள் விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது.திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் பூக்கள், வாழைக் குலைகளை பொதுமக்களை ஆர்வமுடன் வாங்கினர்.
Tirupur News,Tirupur News Today- ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பூஜைப்பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் பெருமாள் கோவில் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாகவே பூக்கள் வியாபாரம் சூடுபிடித்தது. இன்று காலை முதல் பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது. இதேபோல் பெருமாள் கோவில் வீதி, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்பட மாநகரின் பல இடங்களில் சாைலயோரத்தில் பொரி, கடலை, பூஜை ெபாருட்கள், வாழைக்கன்றுகள், அலங்கார பொருட்கள், மாவிலை, குருத்தோலை தோரணம், தேங்காய், பூசணிக்காய், பூ மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பனியன் நிறுவனத்தினர் வாழைக்கன்றுகள், அலங்கார பொருட்கள், மற்றும் பூக்களை மொத்தமாக வாங்கி சென்றனர். கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் மாநகரில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இதேபோல் பழ வகைகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது.கடைகள் மற்றும் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் வாழைப்பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூ, பழங்கள் மற்றும் பூஜைபொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. குறிப்பாக பூக்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். பெருமாள் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்த நிலையில் அவர்களின் வாகனங்கள் மார்க்கெட்டின் முன்பாக உள்ள ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஏற்கனவே ரோட்டின் மற்றொரு பக்கத்தில் தள்ளுவண்டிகளில் பழம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நடந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டதால் இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இடமின்றி அவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் திருப்பூர் பல்லடம் ரோட்டில் அதிக அளவிலான வாகனங்கள் செல்வதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.குறிப்பாக பண்டிகை நாட்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயுதபூஜை கூட்ட நெரிசலையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu