திருப்பூரில் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கோரிக்கை
Tirupur News- திருப்பூரில் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கோரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்துள்ள தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், பனியன் சங்க பொதுச்செயலாளா் என்.சேகா் உள்ளிட்டோா் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்த தொழிலாளா்கள் வாங்கும் ஊதியத்தில் ஒருபகுதி வீட்டு வாடகைக்கே செலவாகிறது. வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ளன. திருப்பூா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு வழங்கக் கோரி ஏஐடியூசி சங்க உறுப்பினா்கள் 1,400 போ் மனு அளித்துள்ளனா்.
இதில், 800 மனு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவில்லை. எனவே, மீதம் உள்ளவா்களுக்கும் கடிதம் வழங்குவதுடன், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தனித்தனியாக ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மேலும் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள பின்னலாடை தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் பல தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்னையாக குடியிருப்பு இருந்து வருகிறது. வாடகை லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பல வீட்டு உரிமையாளர்கள், சின்ன சின்ன அறைகளை கட்டி வைத்து, 10 வீடுகளுக்கு ஒரு கழிப்பிடம் என, குடியிருப்பு வாசிகளான தொழிலாளர்களை அவதிப்படுத்துகின்றனர். குறிப்பாக வாடகை வீடுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த முக்கிய கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு ஏஐடியூசி சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu