திருப்பூரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் பி.என் ரோட்டில் இருந்த, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், முக்கிய ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் வருவாய்த்துறை, போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் சனிக்கிழமைதோறும் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். அதன்படி நேற்று காலை திருப்பூர் பி.என்.ரோட்டில் பிச்சம்பாளையம் முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
பெயர்பலகை, தற்காலிக பந்தல், தடுப்புகள் உள்ளிட்டவற்றை பொக்லைன் வாகனம் மூலமாக அகற்றினார்கள். பலரும் அவர்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அவசர அவசரமாக அகற்றி கொண்டனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu