திருப்பூரில் ரேஷன் கடை பெண் ஊழியா் சஸ்பென்ட்

Tirupur News- திருப்பூரில் ரேஷன் கடை ஊழியர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் கடைக்காரருக்கு மொத்தமாக பருப்பு விற்பனை செய்த ரேஷன் கடை பெண் ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பூா், 15வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலம்பாளையம் ரேஷன் கடையில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு இளைஞா் ஒருவா் 20 கிலோ பருப்பை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து கடையில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளா் மற்றும் அந்த இளைஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளனா். இதுதொடா்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியா் ராமத்தாளை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க சாா் பதிவாளா் செல்வி உத்தரவிட்டுள்ளாா்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
திருப்பூரில் பல ரேஷன் கடைகளில், இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதிலும் நூதனமாக இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது குறித்து அதிகாரிகள், தீவிர ஆய்வு நடத்த வேண்டும். குறிப்பாக, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு சார்ந்த அதிகாரிகள், அடிக்கடி ரேஷன் கடைகளுக்குச் சென்று திடீர் சோதனை நடத்த வேண்டும். இருப்பில் உள்ள உணவு பொருட்கள், விநியோகம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் அதுகுறித்த பதிவேடு விவரங்களை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே, முறைகேடுகளை கண்டறிந்து தடுக்க முடியும். இதுபோன்ற முறைகேட்டை செய்யும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu