தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் பேரணி
Tirupur News- பேரணியில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
.Tirupur News,Tirupur News Today- நியாய விலைக் கடைகளில் பாமாயில் விற்பனையை ரத்து செய்து தேங்காய், நிலக்கடலை எண்ணெய்களை விற்பனை செய்ய வலியுறுத்தி திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. திருப்பூா் -பல்லடம் சாலையில் வித்யாலயம் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா்.
சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம் பேரணியைத் தொடங்கிவைத்தாா். இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உரிய விலையின்றி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் இந்தோனேஷியா-மலேசியா பாமாயிலை மானியம் கொடுத்து வாங்கி விற்பனை செய்து வருகிறது.
தமிழக விவசாயிகள் வாழவழியின்றி இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வரிப்பணம் ஆண்டுதோறும் ரூ.1,800 கோடி வெளிநாட்டு பாமாயில் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருவது மாபெரும் கொடுமையாகும். திமுக அரசு கடந்த 2021- ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 66 இல் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று உறுதியளித்தது. ஆனால், தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, நியாய விலைக் கடைகளில் பாமாயில் விற்பனையை ரத்து செய்து தேங்காய், நிலக்கடலை எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்றனா். இப்பேரணியில் இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் நல்லாக்கவுண்டா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா், மேற்கு மாவட்டச் செயலாளா் ஏபிடி எம்.மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu