திருப்பூரில், நீராவியை உற்பத்தி செய்ய பொது பாய்லா் கட்டமைப்புகளை உருவாக்க திட்டம்
Tirupur News- சாயக் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் சாயக் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான நீராவியை உற்பத்தி செய்ய பொது பாய்லா் கட்டமைப்புகளை உருவாக்க சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், பொது பயன்பாட்டு பாய்லா் அமைப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காந்திராஜன் தலைமை வகித்து பேசியதாவது,
பொது சுத்திகரிப்பு நிலையங்களில் 10 டன் முதல் 15 டன் கொள்ளளவிலும், சாய ஆலைகளில் 3 முதல் 5 டன் பாய்லா்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாய்லா்களை சூடேற்ற விறகு பயன்படுத்தப்படுகிறது. சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்களில் செலவு அதிகரிக்க பாய்லா் பயன்பாடு முக்கியக் காரணமாகும்.
சூரத்தை சோ்ந்த ஸ்டீம் ஹவுஸ் நிறுவனம், பல்வேறு மாநிலங்களில் தொழில் துறை பயன்பாட்டுக்கான பொது பாய்லா் கட்டமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்கள், சாய ஆலைகள் கூட்டாக இணைந்து பொது பாய்லா் கட்டமைப்பை உருவாக்க முடியும்.
இதற்கான இடம் தோ்வு செய்து 30 முதல் 60 டன் பாய்லா்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் நீராவி, குழாய்கள் மூலம் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
அதிகபட்சம் 11 கி. மீ. தொலைவு வரை நீராவியை கொண்டு செல்ல முடியும். இந்த பாய்லா்களை இயக்குவதற்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. தனித்தனி பாய்லா் பயன்படுத்துவதைவிட, பொது பாய்லா் நிறுவுவதன் மூலம் நீராவி உற்பத்திக்கான செலவினத்தை பாதியாக குறைக்க முடியும். மேலும், சாய ஆலைகளில் பாய்லருக்கான இடத்தில் வேறு புதிய தொழில்நுட்பங்களை நிறுவி உற்பத்தியை மேம்படுத்தலாம்.
பொது பாய்லா் கட்டமைப்பு உருவாக்குவது குறித்து பொது சுத்திகரிப்பு நிலைய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், சாய ஆலை உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் முருகசாமி, சூரத் ஸ்டீம் ஹவுஸ் நிா்வாக இயக்குநா் விஷால், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu