திருப்பூர்; வீரபாண்டி, கோமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை

Tirupur News,Tirupur News Today- வீரபாண்டி, கோமங்கலம் பகுதிகளில், நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வீரபாண்டி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை 11-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, திருப்பூர் மின் செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டி துணை மின்நிலையத்தில், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அவசர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், தந்தை பெரியார் நகர் மற்றும் முருகம்பாளையம் மின் பாதைகளில் மின் வினியோகம் தடைபடும். அதனால் கீழ்காணும் பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.
மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
முருகம்பாளையம், பாறக்காடு, சூரியா நகர்,கோடீஸ்வரா நகர், கருவேலங்காடு, சிவசக்தி நகர், தந்தை பெரியார் நகர், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்று தெரிவித்துள்ளார்.
உடுமலை அடுத்த கோமங்கலம் துணை மின் நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, உடுமலை மின்வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கோமங்கலம் துணை மின்நிலையத்தில், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
கோமங்கலம், கோமங்கலம் புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, கோழிகொட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு, ஜல்லிப்பட்டி, மலையாண்டிபட்டினம் கெடிமேடு, கூள நாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலப்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu