15 வேலம்பாளையத்தில் நாளை (நவ.1ம் தேதி) மின்தடை

15 வேலம்பாளையத்தில் நாளை (நவ.1ம் தேதி) மின்தடை
X

Tirupur News- பராமரிப்பு பணிகளுக்காக 15 வேலம்பாளைத்தில் நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் நாளை (1ம் தேதி) மின் பராமரிப்பு பணிகளுக்காக, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் நாளை, (நவம்பர் 1ம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவிநாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ம் தேதி (நாளை )மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை

ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் ஒரு பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture