வீரபாண்டி, ஆண்டிபாளையத்தில் நாளை (16ம் தேதி) மின்தடை

வீரபாண்டி, ஆண்டிபாளையத்தில் நாளை (16ம் தேதி)  மின்தடை
X

Tirupur News,Tirupur News Today-வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில், பராமரிப்பு பணிகளுக்காக நாளை (16ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது,

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் வீரபாண்டி மற்றும் ஆண்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டி

வீரபாண்டி துணை மின்நிலையத்தில், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்;

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம் (வாய்க்கால் மேடு), குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி.மில் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபாளையம்

ஆண்டிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதால் இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்;

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன் புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீ நிதி கார்டன், தனலட்சுமி நகர், கொளத்துபுதூர், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!