திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம்

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம்
X
திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

தபால் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிய, அவ்வப்போது குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் கோட்டத்தில், தபால்துறை சேவை தொடர்பான புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர், வரும் 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு பங்கேற்கலாம்.

இல்லாவிடில், 'தபால் கோட்ட கண்காணிப் பாளர், திருப்பூர் கோட் டம் 641 601' என்ற முகவரிக்கு, தபால் மூல மாகவும், மார்ச் 22க்குள் வந்து சேருமாறு அனுப்பலாம். கடிதத்தின் மேல், 'DAK ADALAT CASE' என, குறிப்பிடுவது அவசியம்.

மேலும், காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கடிதத்தில் வேண்டும் என, திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!