திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம்!!

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம்!!
X
திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம்!!

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது தவிர 26 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் 23 குழுக்களும் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணிக்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மாவட்டக் கலெக்டர் கிருஸ்துராஜ் மாவட்ட மருத்துவ நலமையத்தில் நேற்று காலை துவக்கிவைத்தார் இதில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட்டுக்கொண்டனர் இந்நிகழ்சியின் போது தொடர்புடைய அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!