திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடந்த போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில், மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகவள்ளி பேசினார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவியருக்கு போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இதில், திருப்பூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமே, போக்சோ சட்டம். 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள்.

தாகாத சொற்களைப் பயன்படுத்துவது, தவறாக ஒலி எழுப்புவது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், பெண்களை தவறான எண்ணத்தில் பார்த்தல், தவறாக புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்கள் போக்சோ சட்டத்திற்குள் அடங்கும். குழந்தைகள் , பெண்களை நேரடியாகவோ அல்லது ஊடகம் வழியாக, மின்னணு சாதனங்கள் மூலமாகவோ பின் தொடர்வது அல்லது கண்காணிப்பது போன்றவைகளும் அடங்கும்.

சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பாலியல் தொந்தரவு அளிக்கும் நபரை தெரிந்தால் உடனே காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பாலியல் தொந்தரவுக்கான தண்டனை நபர் ஒருவர் குழந்தைக்கு எதிராகப் பாலியல் தொந்தரவு செய்திருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பேசினார்.

மாணவியர் போக்சோ சட்டம் குறித்து, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவச் செயலர் ரமேஷ் நன்றியுரை கூறினார். மாணவச் செயலர்கள் ராம்குமார், பாலாஜி தலைமையில் ஏராளமான மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட செய்திகளை அறிந்து கொள்ள
: https://www.instanews.city/tamil-nadu/tiruppur

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!