ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட தயாராகும் திருப்பூர் மக்கள்; பூக்கள் விலை அதிகரிப்பு
Tirupur News- திருப்பூரில், ஆயுத பூஜையன்று வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை வாங்கும் ஆர்வத்தில் வாடிக்கையாளர்கள்.
Tirupur News,Tirupur News Today- கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.அதே சமயம் தொழில், வணிகம், வர்த்தகம் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.
தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும். அதேபோல் அனைத்து வாகனங்களையும் அலங்கரித்தும் பூஜை நடத்துவர்.
பூஜைகளின் போது, வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில், வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த மின்னும் வகையிலான அலங்கார வடிவங்கள், செயற்கை பூக்கள் கொண்ட தோரணங்கள், மாலைகள் கொண்டும் அலங்காரம் செய்வது வழக்கம்.
அவ்வகையில் பூஜையில் பயன்படும் அலங்கார காகித தோரணங்கள், ரிப்பன்கள், மாலைகள், சரஸ்வதி படம் அச்சிட்ட ஆயுத பூஜை எழுத்துகள் கொண்ட வடிவங்கள், ஜொலிக்கும் ஜிகினா காகித டிசைன்கள் ஆகியன கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய அளவிலான எல்.இ.டி., சர விளக்குகள், நிறம் மாறி எரியும் பல வர்ண விளக்கு சரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது. பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் அதனை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
பூக்கள், வெள்ளை பூசணி விற்பனை அதிகரிப்பு
திருப்பூரில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை கொண்டாடும் விதமாக மக்கள் பூஜை பொருட்களை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ நேற்று மாலை கிலோ ரூ. 800 வரை விற்கப்பட்டது. அதே போல், மஞ்சள் செவ்வந்தி பூ கிலோ ரூ. 200க்கும் விற்கப்பட்டது. அதேபோல் வீடுகளில், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி கழிப்பதற்கான வெள்ளை பூசணிக்காய் விற்பனையும் வேகமாக நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu