உலகளாவிய வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

மாதிரி படம்
சர்வதேச அளவில் குறைந்த விலைக்கு ஆடை ரகங்களை விற்பனை செய்யும் போட்டி நாடுகளால், திருப்பூர் உட்பட நாடு முழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து மத்திய ஜவுளித் துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங் கூறுகையில், இந்திய ஜவுளித் துறைக்கு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானதாக உள்ளன. பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. இந்நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் மூலம், சர்வதேச சந்தையில் போட்டி களத்தில் சமநிலை உருவாகும். போட்டி நாடுகளை எதிர்கொள்வது எளிது. புதிய சந்தையை வசப்படுத்துவதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, ஆண்டு முழுதும் ஆடை தயாரிப்புக்கான வாய்ப்பு கிடைக்கும். அதன் காரணமாக ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu