திருப்பூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

திருப்பூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்
X

Tirupur News- வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை, திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

Tirupur News- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் இன்று (சனிக்கிழமை) திறக்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் இன்று (சனிக்கிழமை) திறக்கப்பட்டது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுந்தஏகாதசி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான வைகுந்தஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி பகல்பத்து பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 17-ஆம் திருப்பள்ளி எழுச்சியும், வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலம், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வைகுந்தஏகாதசி பெருவிழாவானது சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஸ்ரீ வைஷ்ணவ வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க மூலவர் அருள்மிகு வீரராகவப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காலை 5.30 மணி அளவில் கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் சொர்கவாசல் வழியாகப் பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு கருடசேவை திருவீதியுலாவும், இரவு 8 மணி அளவில் இராபத்து உற்சவ ஆரம்பமும் நடைபெறுகிறது. முன்னதாக திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு ஒரு லட்சத்து 8 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பெருமாள் கோவில்களில் பக்தர் கூட்டம்

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவில், அவிநாசிகவுண்டம்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவில், அவிநாசியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், சேவூரை அடுத்துள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் திருப்பூர் பல்லடம் ரோடு அவரப்பாளையம் பகுதியில் உள்ள அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று சொர்க்கவாசல் திறப்பு, சிறப்பு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதல் இரவு வரை வரிசையில் காத்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், தக்காளி சாதம், புளியோதரை, லட்டு உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!