திருப்பூரில் விற்பனை மையத்துடன் டிப்மா சங்கம் திறப்பு
Tirupur News- திருப்பூரில் டிப்மா சங்கம், விற்பனை மையம் திறப்பு விழா நடந்தது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் கொங்கு மெயின் ரோடு தனலட்சுமி தியேட்டர் பின்புறம் பி.கே.ஜி., லே அவுட்டில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்துக்கு (டிப்மா) விற்பனை மையத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
டிப்மா சங்க தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் டிப்மா சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது,
பாலிபேக் உற்பத்தி மூலப்பொருட்கள் கிடைப்பதில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை போக்கும் வகையில், டிப்மாவின் மூலப்பொருள் விற்பனை மையமும் புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ளது. பாலிபேக்கில் பிரிண்டிங் செய்வதற்கான இங்க் ரகங்கள், ரெடியூசர் உள்பட அனைத்து உதிரி பொருட்களும், மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.
பாலிபேக் நிறுவனங்களுக்கு விரைவாகவும், தட்டுப்பாடு இன்றி சீரான விலைக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி மேம்படும்.தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் டிப்மா சங்கம் உறுப்பினராக இணைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu