திருப்பூரில் நாளை மறுதினம் (26் தேதி) மின்தடை அறிவிப்பு
Tirupur News- திருப்பூரில் நாளை மறுதினம் ( செவ்வாய்) மின்தடை அறிவிப்பு (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் டிசம்பர் 26ம் தேதி, நாளை மறுதினம் செவ்வாய் அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து திருப்பூர் மாநகரம் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் 26ம் தேதி திருப்பூரில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலிபாளையம் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லுார், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ., நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானுார், செவந்தம்பாளையம்.
நல்லுார் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
நல்லுார், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு. பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம், செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர்.ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu