திருப்பூரில் நாளை ( 16ம் தேதி) மின்தடை அறிவிப்பு
Tirupur News- திருப்பூரில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ( கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை (சனிக்கிழமை) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை கீழ்காணும் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தைபேட்டை துணை மின் நிலையம் :
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
அரண்மனைப்புதுார், தட்டான் தோட்டம், எம்.ஜி., புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, செரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்., நகர், கே.எம்.ஜி., நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க., நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி., நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின் ரோடு மற்றும் தாராபுரம் ரோடு.
பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம் :
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி., நகர், காளிநாதம்பாளையம் மற்றும் பலவஞ்சிபாளையம்.
வேலம்பாளையம் துணை மின் நிலையம்;
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பாண்டியன் நகர் உயரழுத்த மின் பாதை : கவுதம் கார்டன், கிரீன் பார்க், ஜெயலட்சுமி நகர், பெரியார் காலனி, இந்திரா நகர், நல்லப்பா நகர் 3வது தெரு, திருவள்ளுவர் தெரு, சவுடம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாத மின்தடை நீடிப்பதாக மக்கள் புகார்
பனியன் தொழில் நகரமாக திருப்பூரில் மாநகர பகுதிக்குள் மிக அதிகளவில் தொழில் நிறுவனங்களும், குடியிருப்புகளும் காணப்படுகின்றன. பனியன் உற்பத்தி மற்றும் அது சார்ந்த உபரி தொழில் நிறுவனங்கள், உற்பத்தி சாலைகள் அதிகளவில் உள்ளதால், மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார தேவைக்கேற்ப கூடுதலாக துணை மின்நிலையங்களும் அமைக்கப்பட்டு, மக்களுக்கு போதிய மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் நகரின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி தொடரவே செய்கிறது. இந்நிலையில் மாதந்தோறும் 3வது சனிக்கிழமைகளில் திருப்பூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை முன் அறிவிப்புடன் மின்தடை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த மின்தடை நாட்களில் மின்வாரியம் தரப்பில் இருந்து மின்பராமரிப்பு பணிகள் மின்வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில், மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. மேலும் இந்த நாட்களில் புதிதாக மின் இணைப்பு தருவதற்கான பணிகள், டிரான்ஸ்பார்களின் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குதல், பழுதடைந்த உதிரி பாகங்களை மாற்றுதல் போன்ற பணிகளும் மின்வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது. அதே நேரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சில தொழில் நிறுவனங்கள் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதும் தொடர்கிறது. இதுவும் மக்களை கடுமையாக பாதிக்கச் செய்கிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu