திருப்பூரில் பிப்ரவரி மாதம் நூல் விலையில் மாற்றமில்லை; தொழில்துறை மகிழ்ச்சி

திருப்பூரில் பிப்ரவரி மாதம் நூல் விலையில் மாற்றமில்லை; தொழில்துறை மகிழ்ச்சி
X

Tirupur News- திருப்பூரில் இந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லை (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் பிப்ரவரி மாதம் நூல் விலையில் மாற்றமில்லை. கடந்த ஜனவரி மாத விலையே தொடரும் என்ற அறிவிப்பால் தொழில்துறை மகிழ்ச்சியடைந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின்படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திற்கான மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல்களில் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இன்றி கடந்த மாத(ஜனவரி) நூல் விலையே தொடரும் என அறிவித்துள்ளனர்.

அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil