/* */

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம்; அரசு பஸ்களில் விழிப்புணர்வு

Tirupur News- வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு பஸ்கள் விழிப்புணர்வு வாசக போஸ்டர்களை ஒட்டி, திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

HIGHLIGHTS

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம்; அரசு பஸ்களில் விழிப்புணர்வு
X

Tirupur News- திருப்பூர் பஸ் ஸ்டாண்டில், பஸ்களில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டிய கலெக்டர்.

Tirupur News,Tirupur News Today- வாக்களிப்பதன் அவசியம் குறித்த போஸ்டர்களை திருப்பூரில் அரசுப் பேருந்துகளில் ஒட்டி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிறிஸ்துராஜ் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, திருப்பூா் பேருந்து நிலையத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டர்களை மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் நேற்று (சனிக்கிழமை) ஒட்டினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 -ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் நாள்தோறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் அரசு கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, வாக்காளா் உறுதிமொழி கையொப்பம் இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12- டி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியும் நடத்தப்பட்டது. மக்களவைத் தோ்தலில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரிகளில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம், விழிப்புணா்வுப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை அதனை எந்த காரணத்துக்காக விட்டுகொடுக்க வேண்டாம். ஒவ்வொரு வாக்காளா்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (தெற்கு) ஆனந்த், வாக்காளா் விழிப்புணா்வு (பொ) அலுவலா் குமாரராஜா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பொது மேலாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Updated On: 31 March 2024 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!