தேசிய ஒருமைப்பாடு முகாம்; திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு

தேசிய ஒருமைப்பாடு முகாம்; திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு
X

Tirupur News- தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். (கோப்பு படம்)

Tirupur News- தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Tirupur News,Tirupur News Today- தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சாா்பில் மதுரை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட பாத்திமா கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு முகாம் டிசம்பா் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம், தெலங்கானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனா். இதில், பேரிடா் காலங்களில் மாணவா்கள் செயல்பாடு, உடலை வலிமையாக வைத்திருப்பது, சுற்றுப்புறத்தைப் பேணிக் காப்பது, தூய்மை இந்தியா திட்டம் போன்ற பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதில், ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம் தொடா்பான கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நாள்தோறும் நடைபெறும்.


மாணவி நித்தியா

இம்முகாமில் கலந்துகொள்ள கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் 10 மாணவ மாணவியா் தோ்வு செய்யப்பட்டனா். இதில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மாணவி நித்தியா (இரண்டாமாண்டு விலங்கியல்) தோ்வாகி உள்ளாா். இவா் திருப்பூா் மாவட்டத்தில் இருந்து தோ்வான ஒரே அரசு கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி நித்யாவை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், சக மாணவ, மாணவிகள் வாழ்த்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழியனுப்பி வைத்தனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!