தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு; ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி ஆய்வுக்கட்டுரை தோ்வு
Tirupur News-புதுடில்லியில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வரும் 27 -ம் தேதி முதல் 31- ம் தேதி வரை நடைபெறவுள்ளது. (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆய்வுக் கட்டுரைத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லியில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பா் 27 -ம் தேதி முதல் 31- ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கான மாநில அளவிலான ஆய்வுக் கட்டுரைத் தோ்வானது திருச்சி மாவட்டம் துறையூா், புத்தானம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் அண்ணையில் நடைபெற்றது.
இதில், திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 9 -ம் வகுப்பு மாணவிகள் கே.கே.வித்யாஸ்ரீ, ஆா்.பி.வானதி ஆகியோா் இயற்பியல் ஆசிரியா் பிரித்விராஜ் வழிகாட்டுதலின்பேரில் நவீன முறையில் நிலம் மற்றும் நீரில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்துதல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்திருந்தனா். இந்த ஆய்வுக் கட்டுரை 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்டது.
ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்த மாணவிகளை பள்ளியின் தலைவா் தியாகராஜன், செயலாளா் செந்தில்நாதன், தாளாளா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் சந்திரசேகா், பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu