கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட் தீர்ப்பு

கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட் தீர்ப்பு
X

நண்பரைக் கொலை செய்த 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

Murder Case Court Judgement திருப்பூர் பனியன் கம்பெனியில் தன்னுடன் வேலை பார்த்தவரை கொலை செய்ததாக நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.

Murder Case Court Judgement

திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்திற்குள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதியன்று அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அஜித்குமாருடன் தங்கி இருந்த நண்பர்கள் கோவை துடியலூரை சேர்ந்த வல்லரசு (26), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26), ஷாஜகான் (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் சேர்ந்து அஜித்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 2ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்பளித்தார் இந்த வழக்கில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி வாதாடினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!