பன்னாட்டு நிறுவனங்கள், பருத்தி இருப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க ‘சைமா’ வலியுறுத்தல்
Tirupur News,Tirupur News Today- பருத்தி இருப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க, சைமா சங்கம் வலியுறுத்தல். (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி இருப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது,
பருத்தி விலை நாள்தோறும் மாறுபடுவதால் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பின்னலாடை உற்பத்தி, கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் கடும் சிரமத்தில் உள்ளன. தொழிலாளா்கள் வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நமது நாட்டில் நமக்கு தேவையான அளவு பருத்தி உற்பத்தி செய்தும் பற்றாக்குறை ஏற்பட பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்தான் காரணமாக உள்ளன.பருத்தி விளைச்சல் உள்ள காலங்களில் ஒரு கேண்டி 365 கிலோ ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையில் குறைந்த விலையில் வாங்கி பல லட்சம் பேல்களை இருப்பு வைத்து கொள்கின்றனா். பின்னா் பருத்தி விளைச்சல் காலம் முடிவடைந்தவுடன் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி ஒரு கேண்டி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையில் விற்பனை செய்கின்றனா்.
இந்த காலகட்டத்தில் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது. ஆகவே, பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி இருப்பு குறித்த விவரங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஜவுளி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபமாக, மாதம் இருமுறை நூல்விலை ஏற்றங்களை சந்தித்துவரும் பனியன் தொழில்துறை பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகிறது. நூல்களின் அடிக்கடி விலை மாற்றத்தால், ஆர்டர்களை பெறுவதில் தொழில் நிறுவனங்களுக்கு சிக்கல் நீடித்து வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu