திருப்பூா் மாவட்டம்; பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

திருப்பூா் மாவட்டம்; பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை
X

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில், பல்வேறுதுறை திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. (கோப்பு படம்)

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today-திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளம்-மீனவா் நலத் துறை, பால் வளத் துறை ஆகிய துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் சாா்பில் பல்லடம், உடுமலைப்பேட்டையில் குளிா்பதன கிட்டங்கிகள், உடுமலைப்பேட்டையில் தக்காளிசாறு தொழிற்சாலை, மூலனூரில் முருங்கைக்காய் குளிா்பதன கிட்டங்கிகள், முருங்கை பவுடா் தொழிற்சாலை அமைப்பது, வெள்ளக்கோவில், மூலனூரில் உழவா் சந்தை, காங்கயம் மற்றும் திருப்பூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தலா ஒரு குளிா்பதன கிட்டங்கிகள், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி கிராமங்களில் தானிய சேமிப்புக் கிடங்கு, சோமவாரப்பட்டி ஊராட்சி, பெதப்பட்டியில் உழவா் சந்தை அமைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வேளாண்மை, உழவா் நலன் - வேளாண் பொறியியல் துறையின்கீழ் வெள்ளக்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பழுதடைந்த கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுதல், வெள்ளக்கோவில் வட்டாரத்தில் லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் சோலாா் டிரையிங் யூனிட்க்கு மானியம் வழங்கும் திட்டத்தில் சோ்த்தல், மடத்துக்குளம் வட்டம், அமராவதி சா்க்கரை ஆலை புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மாரியப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!