திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி
X

Tirupur News-ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட மக்கள். 

Tirupur News-ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா், அவிநாசி, பல்லடம் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், கருவம்பாளையத்தில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மேலும், இந்த நிறுவனத்துக்கு பல்லடம், அவிநாசி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் இருக்கின்றன.

இந்த நிறுவனத்தில் திருப்பூா், அவிநாசி, பல்லடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாத ஏலச்சீட்டில் சோ்ந்து பணம் கட்டி வந்தனா். இதனிடையே, சீட்டில் சோ்ந்த நபா்களுக்கு முதிா்வுகாலம் முடிந்தும் பணம் கொடுக்காமல் இருந்து வந்தனா்.

இந்நிலையில், ஏலச்சீட்டில் பணம் கட்டிய சிலா் கடந்த புதன்கிழமை நிதி நிறுவனத்துக்குச் சென்று பாா்த்தபோது அதன் உரிமையாளா் நிறுவனத்தை காலி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவன உரிமையாளரான காா்த்திக்கை (32) கைது செய்து, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!