உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்
X
திருப்பூரில் விருப்ப மனு வழங்கிய பாஜகவினர். 
திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனுவை வழங்கினர்.

அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் பா.ஜ.க வடக்கு மாவட்டம் சார்பாக, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வது வார்டில் போட்டியிட தாரணி பாலகிருஷ்ணன் விருப்ப மனுவை, மாவட்ட தலைவர் செந்தில்வேலிடம் அளித்தார். அவிநாசி போரூராட்சி 14 வது வார்டில் ஊடக பிரிவு மாவட்ட பொருளாளர் சந்துருவின் மனைவி, கவிதா சந்துருவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அளித்தார்.


பல்லடம் நகர பாஜக சார்பாக, நகரத் தலைவர் வடிவேலன் தலைமையில், விருப்ப மனுவை, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.சி.எம்.பி. , சீனிவாசன், கதிர்வேல், மாவட்டச் செயலாளர் வினோத் வெங்கடேஷ் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது. ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் மனோகரன், வீரபாண்டி மண்டல தலைவர் மகேஷ், கிளை தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், மேலும் பல பாஜக நிர்வாகிகள், விருப்ப மனுவை வழங்கினர்.

Tags

Next Story
ai marketing future