திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் ராகு, கேது பகவானுக்கு கும்பாபிஷேக விழா
Tirupur News,Tirupur News Today-சோழாபுரி அம்மன் கோவிலில் ராகு, கேது பகவானுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கல் மண்டப கோவில் இதுவாகும். சிதலமடைந்து இருந்த இந்த கோவிலை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராக இருந்த காலத்தில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கோவிலில் ஸ்ரீசோழாபுரி அம்மன் சாந்த சொரூபியாக உள்ளார். கோவில் வளாகத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட காசிவிஸ்வநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஏற்கனவே இருந்த சுந்தரமூர்த்தி விநாயகர் சிலையும் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரே கல்லால் ஆன ராகு, கேது பகவான் சிலை கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. சோழாபுரி அம்மனுக்கு பவுர்ணமி பூஜை சிறப்பு வாய்ந்தது.
இந்நிலையில் ராகு, கேது பகவானுக்கு கோவில் வளாகத்தில், தனியாக கல் கோவில் மற்றும் கோபுர கலசம் அமைத்து கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஏராளமான பக்தர்கள், தொழில் நிறுவன உ.ரிமையாளர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ராகு, கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். திருமணத் தடை உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தின் நகலை வைத்து பூஜை செய்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu