மழைவெள்ளத்தால் சேதமடைந்த பின்னலாடைகள்; இழப்பீடு பெற திருப்பூரில் ஆலோசனை

மழைவெள்ளத்தால் சேதமடைந்த பின்னலாடைகள்; இழப்பீடு பெற திருப்பூரில் ஆலோசனை
X

Tirupur News- தூத்துக்குடி துறைமுகம் சரக்கு முனையத்தில் சேதமடைந்த பின்னலாடைகளுக்கு இழப்பீடு குறித்த ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. 

Tirupur News- தூத்துக்குடி துறைமுகம் சரக்கு முனையத்தில் சேதமடைந்த பின்னலாடைகளுக்கு இழப்பீடு பெறுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடந்தது.

Tirupur News,Tirupur News Today -தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சரக்கு முனையங்களில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த திருப்பூர் பின்னலாடைகள், வெள்ள பாதிப்பில் சேதமடைந்தன.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் சரக்கு முனையங்களில் சேதமடைந்துள்ள பின்னலாடைகளை பார்வையிட்டனர். நல்ல நிலையில் உள்ள ஆடைகளை உடனே வர்த்தகர்களுக்கு அனுப்பவும், சேதமான ஆடைகளுக்கு உரிய நிவாரணம் அல்லது காப்பீட்டு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரக்கு முனையத்தில் ஏற்பட்ட வெள்ளசேதத்துக்கு இழப்பீடு பெறுவது, ஏற்றுமதி சரக்குகளை கையாள்வது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக கோவையை சேர்ந்த காப்பீட்டு ஆலோசகர் மோகன்குமார்; ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவன முன்னாள் பொதுமேலாளர் சந்தானம் ஆகியோர் பங்கேற்று காப்பீட்டை எவ்வாறு பெறுவது, வழிமுறைகள் என்னவென்று ஏற்றுமதியாளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து பேசினர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். வெள்ள சேதம் குறித்து பார்வையிட்ட இணைசெயலாளர் குமார் துரைசாமி, அங்கு பார்த்த விபரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினர். பாதிக்கப்பட்ட நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

காப்பீட்டு ஆலோசகர்கள், காப்பீட்டில் உள்ள நிறைகள், காப்பீட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேதம் தொடர்பாக இழப்பீடு பெற, எவ்வாறு ஆவணங்களை பெறுவது, கையகப்படுத்த வேண்டிய, தயார் செய்ய வேண்டிய ஆவணம் குறித்து ஆலோசனை வழங்கினர்.

வரும் காலத்தில் இதுபோன்ற பாதிப்பு, சேதம் வரும் போது எப்படி தங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தினர். ஏற்கனவே தொழில் ரீதியான பல விஷயங்களில் தொழில்துறை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற மழைவெள்ளம், இயற்கை சீற்றங்களும் தொழிலை கடுமையாக பாதிக்கச் செய்கின்றன என்று ஏற்றுமதியாளர்கள் கவலையில் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!