திருப்பூரில் இன்று துவங்குகியது நிட் - டெக் கண்காட்சி
Tirupur News- திருப்பூரில் நிட்டெக் கண்காட்சி துவங்கியது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் அதிநவீன பின்னலாடை உற்பத்தி இயந்திரங்களுடன், 'நிட்- டெக்' கண்காட்சி, திருமுருகன்பூண்டியில் இன்று துவங்கியது.
திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள ஹைடெக் இன்டர்நேஷனல் வளாகத்தில், 17வது 'நிட்- டெக்' பின்னலாடை இயந்திர கண்காட்சி, இன்று துவங்கியது. காலை, 9:30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவில், 'நிட் - டெக்' தலைவர் ராயப்பன் வரவேற்றார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், கண்காட்சி அரங்கை திறந்துவைத்தார். தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் அப்புக்குட்டி, கண்காட்சி வழிகாட்டியை வெளியிட்டார். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.
அனைத்து வசதிகளுடன், சர்வதேச தரத்தில், இரண்டு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில், கண்காட்சி நடைபெற்று வருகிறது. உள்நாடு மற்றும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்பட உலகளாவிய நாடுகளில் உயர் தொழில்நுட்ப பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் திருப்பூருக்கு வந்திறங்கியுள்ளன. 'நிட்- டெக்' கண்காட்சியில், 325 ஸ்டால்களில், இயந்திரங்கள் அனைத்தும் முழு இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், பேக்கிங் என, பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்துவகை இயந்திரங்களும், கண்காட்சியில் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன.
ஜெர்மனி நாட்டு தயாரிப்பில் உப்பு இன்றி சாயமேற்றுதலுக்கு கைகொடுக்கும் டையிங் இயந்திரம்; உயர் தொழில்நுட்பங்கள் நிறைந்த டிஜிட்டல் பிரின்டிங், ஓவல், ரோட்டரி பிரின்டிங் இயந்திரங்கள், ஆடை, துணிகளை சுமந்து செல்லும் ரோபோக்கள், சாயக்கலவை தயாரித்துக்கொடுக்கும் ரோபோட்டிக் ஆய்வகம் உள்பட செலவினங்களை குறைத்து, உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்கள்; இயந்திர உதிரிபாகங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சி, வரும் 4ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu