மே 5ம் தேதி கண்ணபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா
கண்ணபுரம் மாரியம்மன் கோவில்.
Kannapuram Mariamman Temple-வெள்ளகோவில் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கண்ணபுரம் மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 19-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து 26-ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி மிகப்பெரிய கால்நடை சந்தை நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
நேற்று காலை 7.30 மணிக்கு தோ் முகூர்த்தம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகா் வழிபாடு நடைபெறுகிறது. வருகிற 1-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து வருகிற 4-ம் தேதி காலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது.
5-ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி திருத்தோில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் மாலை 4.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் சாமிநாதன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி கலெக்டா் வினீத், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொள்ள உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலா் ராமநாதன், உதவி ஆணையா் அன்னக்கொடி ஆகியோா் செய்து வருகின்றனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu