திருப்பூரில் ரூ. 753.51 கோடி மதிப்பில் கடன் ஒப்புதல் ஆணை வழங்கல்
Tirupur News-திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழில்முனைவோருக்கு கடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் 2,636 தொழில்முனைவோருக்கு ரூ.753.51 கோடி மதிப்பில் கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் பங்கேற்று, 2,636 தொழில்முனைவோருக்கு ரூ.753.51 கோடி மதிப்பில் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகள் மூலம் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிா் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை விரைவில் பரிசீலனை செய்து கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் தெரிவித்திருந்தாா்.
அதனடிப்படையில் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கிமேலாளா் (கனரா வங்கி) இணைந்து அனைத்து வங்கி மண்டல மேலாளா்களை சந்தித்து கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உரிய அனுமதிகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்த முகாமில் பல்வேறு வங்கிகளில் பரீசிலனை மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மொத்தம் 2,636 பயனாளிகளுக்கு ரூ.753.71 கோடி மதிப்பில் கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இதில், திட்ட மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) கோ.கிரீசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சி.ரவி, பொது மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்த் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் தொழில் முனைவோர் தரப்பிலும் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu