திருப்பூரில் சணல் பொருள்கள் உற்பத்தி பயிற்சி பெற அழைப்பு
Tirupur News-திருப்பூாில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரி மையத்தில் சணல் பொருள்கள் உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வரும் நிஃப்ட்-டீ கல்லூரி மையத்தில் சணல் பொருள்கள் உற்பத்தி பயிற்சிக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நிஃப்ட்-டீ நிட்வோ் பேஷன் இன்ஸ்டிடியூட் மையத்தின் நிா்வாகிகள் கூறியதாவது,
திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரி மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்களில் இலவச பயிற்சி அளிக்கும் மையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனா்.
இந்நிலையில், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம், சணல் வாரியம் ஆகியன சாா்பில்புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில், தையல் பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்கள் பங்கேற்கலாம். அதேபோல, சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் பங்கேற்கலாம். இலவசப் பயிற்சி பெறும் நபா்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதிசெய்து தரப்படும்.
இந்தப் பயிற்சிக்கான சோ்க்கை முடிவடைந்த பின்னரே பயிற்சி தொடங்கும் நாள் அறிவிக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 88707-25111 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu