சிசிடிவி கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், சிசிடிவி கேமரா பயன்பாடு குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. (கோப்பு படம்).
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்றோர் பயனடையும் வகையில், கனரா வங்கி சார்பில், சிசிடிவி கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கி கிளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் சிசிடிவி., கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 உடன் 14- ம்தேதி( திங்கள் கிழமை) வங்கி கிளையில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை. பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.
தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமன்றி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். மேலும் தொடர்புக்கு 9952518441, 8610533436, 9489043923 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu