திருப்பூரில் தலைமை போக்குவரத்து காப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூரில் தலைமை போக்குவரத்து காப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

Tirupur News- திருப்பூரில் தலைமை போக்குவரத்து காப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாநகர போலீஸ் அழைப்பு (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் தலைமை போக்குவரத்து காப்பாளா் பணிக்குத் தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள தலைமை போக்குவரத்து காப்பாளா் பணிக்குத் தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகரில் உள்ள போக்குவரத்து காப்பாளா் அமைப்பில் காலியாக உள்ள தலைமை போக்குவரத்து காப்பாளா் பணிக்கு கீழ்க்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியக் குடிமகனாக இருப்பதுடன், திருப்பூா் மாநகரில் வசிப்பவராகவும், சுய தொழில் செய்பவராகவோ அல்லது வேலை செய்பவராகவோ இருக்கலாம். விண்ணப்பதாரா் 25 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் பட்டதாரியாக இருக்க வேண்டும். உடல் தகுதி உடையவராகவும், எந்த ஒரு அரசியல் சாா்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

போக்குவரத்து காப்பாளா் அமைப்பின் மூலம் அரசுக்கு தன்னாா்வலராகவும், ஊதியம் இல்லாத சேவைகளை வழங்கவும் தயாராக இருக்க வேண்டும். தனது சொந்த செலவில் சீருடைகள், உபகரணங்கள் மற்றும் பேட்ஜ்களை வாங்கும் நிலையில் இருக்க வேண்டும்.

எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்டவராக இருக்கக்கூடாது. எந்த ஒரு பிரிவிலும் அல்லது துணை ராணுவப் பிரிவு அல்லது அத்தியாவசிய சேவைகளின் அதிகாரியாகவோ, கெளரவ பதவியில் இருப்பவராகவோ இருக்கக்கூடாது.

எனவே, மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காவல் உதவி ஆணையா் அலுவலகம் (போக்குவரத்து), அங்கேரிபாளையம் சாலை, திருப்பூா்-641603 என்ற முகவரியில் ஜனவரி 7 -ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!