திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு
X

Tirupur News- நிப்ட் டீ கல்லூரியில் தையல் பயிற்சி பெற அழைப்பு (கோப்பு படம்)

Tirupur News-திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் இலவச தையல் பயிற்சிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் இலவச தையல் பயிற்சிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான இலவச தையல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில், பங்கேற்க 10 -ம் வகுப்பு, அதற்குமேல் படித்த 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த 2 மாத கால பயிற்சிக்கான பாடப் புத்தகம், சீருடை, செலவினங்கள் ஆகியவை முற்றிலும் இலவசம். சுயமாக தொழில் தொடங்கவிருக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்களில் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்படும்.

மேலும், பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 80728-30141, 99940-84998 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!