பனியன் நிறுவனங்களில் ஆர்டர் அதிகரிப்பு; திருப்பூர் திரும்பும் வடமாநிலத் தொழிலாளர்கள்

பனியன் நிறுவனங்களில் ஆர்டர் அதிகரிப்பு; திருப்பூர் திரும்பும் வடமாநிலத் தொழிலாளர்கள்
X

Tirupur News- திருப்பூர் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் ஒரு பகுதி. 

Tirupur News- வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- பனியன் நிறுவனங்கள் பரபரப்பாக இயங்க துவங்கிவிட்டதால், பொங்கல் பண்டிகை தொடர்விடுமுறையில் சென்ற வடமாநில தொழிலாளர்கள், கடந்த சில நாட்களாக திருப்பூர் திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ேஹாலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்; சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று, விரைவில் திரும்புவர்.

பொங்கல் பண்டிகைக்கு, ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என, நான்கு நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து, வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த, மாதம் 16ம் தேதிக்கு பிறகு, சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள், தற்போது திருப்பூர் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து துவங்கியுள்ளது. தொழிலாளர்கள் கைவசம் இருக்க வேண்டுமென, நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தைசேர்ந்த தொழிலாளர்கள், தற்போது திரும்பிக்கொண்டிருக்கின்றனர். உ.பி., தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர். விடுமுறை முடிந்து, தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும், கடந்த சில நாட்களாக, ரயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது; புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால், பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே, சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர், என்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்களுக்கு அதிகளவில் திருப்பூரில் வேலைவாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், இங்கு பல ஆண்டுகளாக பணிசெய்து வந்த தென்மாவட்ட தொழிலாளர்கள் பலரும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட சென்ற பிறகு, அங்கேயே செட்டில் ஆகி விட்டனர். திருப்பூருக்கு பலரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!