திருப்பூரில் மேயரிடம் அடுக்கடுக்கான குறைகளை கொட்டித்தீர்த்த பெண்கள்
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மத்திய நிலையத்திலிருந்து கோவை ஈரோடு சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குமான நகர்ப்புற பஸ்களும் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதனிடையே பஸ் நிலையத்தில் கடைக்காரர்கள் ஆக்கிரப்பு செய்து நடை பாதையில் கடை அமைக்கப்படுவதால் பொதுமக்கள் வெயிலுக்கு ஒதுங்க கூட முடியாத நிலை இருப்பதாகவும். போதிய அடிப்படை வசதிகள் இல்லை, சுகாரதாரமற்ற கழிப்பிடத்தை பயண்படுத்த முடியாத அவல நிலை, கட்டணக்கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் தொடர் புகார்கள் மாநகராட்சி நிர்வாத்திற்கு வந்த வண்ணம் இருந்தது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருந்து வந்தனர். இதனால் பொதுமக்கள் சார்பில் தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சேற்று திடீர் ஆய்வில் இறங்கினார். அப்போது பொதுமக்களை சந்தித்து பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கோடைக்காலம் என்பதால் நிழலுக்கான ஏற்பாடுகள் அமைத்து தரவேண்டும், சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் , பஸ்களுக்கான அட்டவணையை பஸ் நிலையத்தில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், கழிவறைகளில் பணம் கொடுத்தாலும் ரசீது கொடுப்பதில்லை, சுகாதாரமும் சீர்கெட்டுள்ளது என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.
தொடர்ந்து கழிவறையில் ஆய்வு மேற்கொண்ட மேயர், சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் எனவும், வரும் பொது மக்களிடம் பணம் வசூலிக்கும் போது அதற்கான ரசீதை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் பஸ் நிலையத்தில் மூன்று பக்கங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஒரு பக்கத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் வகையில் செய்யப்பட்டிருந்தது உடனடியாக மற்ற இரண்டு பகுதிகளில் பழுதான குழாய்களை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் , கோடை காலம் என்பதால் மேற்கொண்டு குடிநீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது அங்கு பஸ்சுக்காக நின்றிருந்த பெண்பயணிகள் சிலர் மேயரை தடுத்து நிறுத்திய பெண்கள், கை காட்டினால் அரசு பஸ்கள் எதுவும் நிற்காமல் செல்கிறது கண்டக்டர் டிரைவர்கள் எரிந்து விழுகின்றனர் என மேயரிடம் சரமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேயரின் இந்த திடீர் ஆய்வின் காரணமாக பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஆய்வின் முடிவில் மேயர் செய்தியாளர்களடம் பேசியபோது, பயணிகள் நடைபதையை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு நோட்டீஸ்வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கழிவறையில் சுகாதார சீர்கேடு காணப்பட்டால் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu