திருப்பூரில் இரவிலும் தொடர்ந்த வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூரில் இரவிலும் தொடர்ந்த வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
X

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் நேற்று இரவு வருவாய்த் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , சான்றிதழ் வழியங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும் , அதீத பணிநெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து சிட்டாப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதுவரை தமிழக அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றம் சாட்டி மூன்றாம் கட்ட போராட்டமாக நேற்று இரவு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil