திருப்பூரில் தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவு
Tirupur News-திருப்பூரில் தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவு ( தி கிட் படத்தில் ஒரு காட்சி)
Tirupur News,Tirupur News Today- நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட, தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்தவும், கலை ஆர்வத்தை தூண்டி, தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும், மாதந்தோறும் ஒரு சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது.
திரைப்படம் முடிந்த பிறகு மாணவர்களை குழுவாக அமர வைத்து, திரைப்படத்தின் மையக்கரு, பிடித்த கதாபாத்திரம் எது, குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தல், படத்தின் முடிவை மாற்றி அமைத்தல் குறித்து விவாதிக்க வைக்க வேண்டும். திரைப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாடியதை அறிக்கையாக தொகுத்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.
1921ல் வெளியான இத்திரைப்படம், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மவுன திரைப்படம்.இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார். ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் குழந்தைகளின் கற்பனைத்திறனை மேலும் விரிவாக்கும்.
இன்றைய தமிழ் சினிமாவில் 18 வயதுக்கு மேற்பட்ட, வயது வந்தோர்களுக்கான படங்கள் மட்டுமே வருகின்றன. சிறுவர், சிறுமியர் பார்ப்பதற்கான பிரத்யேக படங்கள் இயக்கப்படுவது இல்லை. சிறுவர் இலக்கிய புத்தகங்களை போல, சிறுவர்களுக்கான படங்களும் மிக அவசியமாகிறது. டிவி சேனல்களில் கார்டூன் நெட்வொர்க், போகோ போன்ற சேனல்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கொண்டதாக இருக்கின்றன. அதுபோல, தி கிட் போன்ற குழந்தைகளை மையப்படுத்திய படங்களை எடுக்க, தமிழ் சினிமா இயக்குநர்கள் இனியாவது முன்வர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu