போக்குவரத்து நெரிசலில் திணறும் திருப்பூர் :மக்கள் அவதி
பைல் படம்.
திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகதிரித்து வரும் வாகன நெரிசலால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
பனியன் தொழிலில் சிறந்து விளங்கும் திருப்பூர், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் முக்கிய நகரமாக உள்ளது. பனியன் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களின் பெருக்கமும், வாழும் மக்களின் அதிகரிப்பும் நகர பகுதிக்குள் பன்மடங்கு பெருகி விட்டது. இதனால் நகரின் பிரதான ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் வாகன நெரிசல். தீராத பிரச்னையாக நீடிக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, நகரின் கட்டமைப்பு வசதிகளை இன்னும் உருவாக்காமல், நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை உருவாக்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, நகரின் பிரதான ரோடுகளை விரிவாக்கம் செய்வது, ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நெரிசலான இடங்களில் மாற்று வழிகளை உருவாக்குவது, நடைபாதை மேம்பாலங்களை அமைப்பது போன்ற திட்டங்கள் மிக அவசியமாகிறது.
திருப்பூரை பொரூத்தவரை. ரோடு ஆக்கிரமிப்புகள் மிக அதிகமாக உள்ளது. திருப்பூர் பல்லடம் ரோடு, குமரன் ரோடு, அவிநாசி ரோடு, பி.என். ரோடு போன்ற முக்கிய ரோடுகளில், கார்கள் மற்றும் டூ வீலர்கள், பெரும்பாலும் ரோடுகளில் பாதி வரை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. ரோட்டோர கடைகளும் அதிகம். ஆக்கிரமிப்புகல் அவ்வப்போது அகற்றப்பட்டாலும் அரசியல் செல்வாக்கு காரணமாக மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றன.
நாரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றவும், புதிய வழித்தடங்களை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் முன்வர வேண்டும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu